பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் களமிறங்கிய ரவி, சதுர சேனாரத்ன

268

சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பலர் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். மேலும் சிலர் தங்கள் உடைமைகளையும் இழந்துள்ளனர்.

நாட்டின் மோசமான காலநிலைப் பாதிப்புகளுக்கு மத்தியிலும் பெரும்பாலான அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும் முன்வரவில்லை. அரசாங்கத்தின் நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் கொழும்பில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நடவடிக்கைகளில் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் கம்பஹாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் பெரும்பாலான இடங்களுக்கு நேரடியாக விஜயம் செய்துள்ள இவர்கள், ஏனைய பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ராணுவம் மற்றும் கடற்படையினரை களமிறக்கி நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தும் வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன கம்பஹாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இருபத்தி நான்கு மணிநேர நிவாரண ஒருங்கிணைப்பு அலுவல்களில் தனது அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது தனிப்பட்ட அலுவல்களை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடங்களில் நேரடியாக களமிறங்கி, நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகளை ஒருங்கினைத்து வருகின்றார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உச்சபட்ச நிவாரணம் வழங்கவும், சொத்து இழப்புகளின் போது 25 லட்சம் வரையான இழப்பீடு வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார உதவிகள் வழங்குவதில் எதுவித குறைகளும் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், தேவையான மருந்து வகைகளை மேலதிகமாக களஞ்சியப்படுத்தி வைக்குமாறும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

கூடுதலான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நோயாளிகளை கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நாடு தழுவிய ரீதியில் இருக்கும் போதனா மருத்துவமனைகளில் அனுமதித்துச் சிகிச்சை அளிக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அவர் தனது அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

SHARE