பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா மேலும் உதவி

231
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா மேலும் உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா மேலும் உதவிகளை வழங்க உள்ளது. அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்கா மேலும் 36 மில்லியன் ரூபா பணத்தை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 7.2 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்குவதாக அறிவித்திருந்தது. மனிதாபிமான உதவிகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது,
மூன்றாண்டு திட்டமொன்றின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்கத் தூதரகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மேலும் உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அமெரிக்கா கணிசமான அளவு உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE