காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நில ஆக்கிரமிப்பினால் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் தன்னெழுச்சியாக கூடிய மக்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று நல்லூர் பின் வீதியில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் குறித்த மகஜரை வழங்கியுள்ளனர்.
இதேவேளை அந்த மகஜரில் தமக்கு உரிய நீதி வழங்குமாறு கோரியுள்ளதுடன், உண்மைகளை வெளிப்படுத்தி மீள நிகழாமையினை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.