பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை கட்டாயமில்லை – கல்வி அமைச்சு

241
MCEcFCF
இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடைகளை அணிவது கட்டாயமில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலை சீருடைகள் இன்றியும் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதியே இவ்வாறு அறிவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேல் மாகாண கல்வி அமைச்சரும் இவ்வாறான ஓர் அறிவிப்பினை விடுத்துள்ளார். மாணவர்கள் எந்தவொரு உடையிலும் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் எனவும், பாடசாலைகளுக்கு சமூகமளிப்பதே மிகவும் அவசியமானது எனவும் மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச தெரிவித்துள்ளார்.
SHARE