பாதுகாப்பற்ற உணவுகளை விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை

260
cd8a8b5be675757c0f9a4a357cb9b362_S
பண்டிகை காலங்களில் நுகர்வோருக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்கு நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்கள் உணவு மற்றும் குடிபானங்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்கும்படி பொது சுகாதார பரிசோதாகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

அத்துடன் பண்டிகைக்காலத்தில் மக்களின் சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வரை இந்த சுற்றி வளைப்பினை முன்னெடுக்கவுள்ளதாகவும், இந்த கால கட்டத்தில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் எனவும் நுகர்வோர் சட்டத்தை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அதிகார சபை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அண்மையில் சூரியவேவாவில் நடைபெற்ற சுற்றிவளைப்பின் போது ஆரோக்கியமற்ற உணவு வகைகளை விற்பனை செய்வதில் ஈடுபட்ட சில வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE