பாதுகாப்பு அரணை தகர்த்து கோல் அடித்த வீரர்! பாயர்ன் முனிச் மிரட்டல் வெற்றி

122

 

பண்டஸ்லிகா போட்டியில் ஆக்ஸ்பர்க் அணியை 2-3 என்ற கோல் கணக்கில் பாயர்ன் முனிச் வீழ்த்தியது.

Aleksandar Pavlovic அரணை தகர்த்து கோல்
WWK Arena மைதானத்தில் நடந்த போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் ஆக்ஸ்பர்க் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் பாயர்ன் அணி வீரர் Aleksandar Pavlovic, கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை எதிரணியின் அரணை தகர்த்து கோல் ஆக மாற்றினார்.

இதனைத் தொடர்ந்து 45+5வது நிமிடத்தில் பாயர்ன் அணிக்கு அல்போன்சோ டேவிஸ் மூலம் இரண்டாம் கோல் கிடைத்தது.

பாயர்ன் முனிச் வெற்றி
அதன் பின்னர் ஆக்ஸ்பர்க் அணிக்கு முதல் கோலை 52வது நிமிடத்தில் Ermedin Demirovic அடித்தார். அதற்கு அடுத்த 6 நிமிடங்களில் பாயர்னின் நட்சத்திர வீரர் ஹரி கேன் (58வது நிமிடம்) அசால்டாக கோல் அடித்தார்.

இந்த கோலுக்கு பதிலாக கோல் அடிக்க 90வது நிமிடம் வரை போராடியது. 90+4வது நிமிடத்தில் Ermedin Demirovic தனது இரண்டாவது கோலை அடித்தார்.

இறுதியில் பாயர்ன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆக்ஸ்பர்க் அணியை வீழ்த்தியது.

SHARE