அட்டன் போடைஸ் டயகம் பிரதான பாதையை செப்பனிட்டு தருமாறு போடைஸ் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
பட்டல்கல சந்தியிலிருந்து போடைஸ் வரை 7 கிலோ மீட்டர் தூரம் குன்றும் குழியுமாக உடைந்து காணப்படுவதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். குறித்த பாதையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அடிக்கடி பழுதடைவதனால் போக்குவரத்தில் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.
மேலும் நோயாளர்களும் கர்ப்பினித் தாய்மார்களும் வாகனங்களில் பயணிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதுடன், போடைஸ் மற்றும் புலியாவத்தை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களூம் மழை காலங்களில் நடந்து செல்ல முடியாதுள்ளது. போடைஸ் பிரதேச மக்களின் நலன் கருதி சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக பாதையை செப்பனிட்டுத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்