தமிழ் சினிமா நட்சத்திரங்களில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன். கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ரேஷ்மி மேனனின் தாயார் அஜிதா மேனன், புற்றுநோயால் அவதிப்பட்டு நேற்று (19.07.2016) கேரளாவில் உயிரிழந்துள்ளார்.
அவரை பிரிந்து துயரத்தில் இருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.