பாம்பினை முத்தமிட சென்ற நபர்: நடந்த விபரீத சம்பவம்

225

மும்பையில் தான் பிடித்த பாம்பிற்கு முத்தமிட முயன்ற நபர் பாம்பு கடித்து இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் சிபிடி பெலபூர் பகுதியை சேர்ந்த சோம்நாத் மாத்ரே என்பவர், பாம்பு பிடிப்பவர்.

சோம்நாத் தான் பிடித்த நல்ல பாம்பு ஒன்றிற்கு முத்தமிட்ட போது அந்த பாம்பு திருப்பி அவரை கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவர், பெலபூர் பகுதியில் பாம்பு பிடிப்பதற்காக சென்றிருக்கிறார். அங்கு ஒரு காரில் இருந்து பாம்பு பிடித்தார். பின்னர் அங்கிருந்து மற்றொரு பகுதிக்கு பாம்பை கொண்டு சென்றுள்ளார்.

அங்கு எல்லோர் முன்பும் பாம்பின் தலையில் சோம்நாத் முத்தமிட முயன்றுள்ளார். அப்போது திடீரென பாம்பு அவரது கன்னத்தில் கடித்து விட்டது.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2-ம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சோம்பாத் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபத்தான பாம்புகளை பிடித்துள்ளார்.

SHARE