விஷால் எப்போதும் பல அதிரடி முடிவுகளை உடனுக்குடன் எடுப்பவர். இதில் சொன்ன தேதியில் படத்தை ரிலிஸ் செய்வதில் விஷாலுக்கு நிகர் விஷாலே.
இந்நிலையில் இவரின் பாயும் புலி படத்திற்கு புதிய தலைவலி ஆரம்பித்துள்ளது. இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிடவுள்ளது. ஆனால், லிங்கா படத்தை இந்நிறுவனம் வெளியீட, படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இதனால், நஷ்டமான அந்த பணத்தை முழுவதுமாக கொடுத்தால் தான் பாயும் புலியை ரிலிஸ் செய்யவிடுவோம் என்று தற்போது விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இம்முடிவால் விஷால் என்ன செய்வார் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.