
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில் தாம் நிரபராதி என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வாவிற்கு எதிராக படுகொலை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்திலும் தாம் குற்றமற்றவர் என துமிந்த சில்வா நீதிமன்றில் இன்றையதினம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு உயர் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் முறையில் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் முல்லேரியா பிரதேசத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
உயர் நீதிமன்ற நீதவான்களான சிரான் குணரட்ன, பத்மினி ரனவக்க, எம்.சீ.பி.எஸ் மொராயஸ் ஆகியோர் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கிலிருந்து தாம் குற்றமற்றவர் என அறிவித்து விரைவில் விடுதலை செய்யக் கூடிய சாத்தியமிருப்பதாக துமிந்த சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2011ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.