பாராளுமன்றத்தில் அதிக வலிகளை சந்திக்கிறேன் – சபாநாயகர்

272
இரத்தம் எடுக்கும்போது ஏற்படும் வலியை விட பாராளுமன்றத்தில் அதிக வலிகளை சந்திப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாம் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் நிலையில் சபாநாயகரான கரு ஜயசூரியவும் இதன்போது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது சபாநாயகரின் இரத்தமாதிரி பரிசோதனைக்காக அவரிடம் இரத்தம் எடுக்கும் போது “சற்று வலி இருக்கும்” என தாதி ஒருவர் சபாநாயகரிடம் கூறியுள்ளார்.

எனக்கு இந்த வலி பெரிதாக தோன்றவில்லை காரணம் இதை விட அதிக வலிகளை நான் பாராளுமன்றத்தில் தினமும் சந்திக்கிறேன் என அந்த தாதிக்கு சபாநாயகர் பதிலளித்துள்ளார்.

a06bd1f2ca48cf3711ddeab060769b18_XL
SHARE