பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கோரிக்கை

300

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சமப்வம் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் முறை தவறி நடந்திருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கத்துடனும் பாராளுமன்ற ஒழுங்கு விதிகள் பின்பற்றுவதனையும் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றிற்குள் நேற்றைய தினம் இடம்பெற்றதனைப் போன்ற சம்பவங்கள் இடம்பெற அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

SHARE