இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ள தரப்படுத்தல்படி பாராளுமன்றில் துடிப்பாக சிறந்து செயற்படும் உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
தரவரிசையில் இரண்டாம் இடத்தை மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் மூன்றாம் இடத்தை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் பெற்றுள்ளனர். நான்காவது இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவும் சஜித் பிரேமதாஸ 5ஆம் இடத்திலும் புத்திக பத்திரண 6ஆம் இடத்திலும் அஜித் பி.பெரேரா 7ஆம் இடத்திலும் சுஜீவ சேனசிங்க 8ஆம் இடத்திலும் சுனில் ஹந்துனெத்தி 9ஆம் இடத்திலும் 10ஆவது இடத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் உள்ளனர். தமிழ்- முஸ்லிம் கட்சி தலைவர்கள் என்ற அடிப்படையில் நோக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 40ஆவது இடத்திலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 84ஆவது இடத்திலும் உள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் 55ஆவது இடத்திலும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அத்தாவுல்லா 54ஆவது இடத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியூதின் 68ஆவது இடத்திலும் உள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் 166ஆவது இடத்திலும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வீ.இராதாகிருஸ்ணன் 133ஆவது இடத்திலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் 205ஆவது இடத்திலும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் 168ஆவது பிரஜைகள் முன்னணி செயலாளர் நாயகம் ஸ்ரீரங்கா 57ஆவது இடத்திலும் உள்ளனர். ஏனைய தமிழ்- முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் பிடித்துள்ள இடங்களும் வருமாறு. பசீர் சேகுதாவூத் – 206ஆவது இடம் |