பாராளுமன்றம் அரசியல் சாசனப் பேரவையாக மாற்றப்பட உள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது குறித்த உத்தேச பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார். நேற்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமயில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றை அரசியல் சாசன பேரவையாக மாற்றி அதன் ஊடாக புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றிற்கு பொறுப்புக் கூறக்கூடிய அரசாங்க ஆட்சிப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.