பாராளுமன்றில் அமளி சபாநாயகரை சுற்றிவளைத்து கருத்து முரண்பாடு சபையின் சபாநாயகர் ஒத்திவைக்காமல் சபையிலிருந்து வெளியேறினார்!

140

LIVE from Parliament

LIVE from Parliament – Tense situation following speech of PM Mahinda Rajapaksa

Posted by Newsfirst.lk on Rabu, 14 November 2018

நாடாளுமன்றத்தை போர்க்களமாக மாற்றிவிட்டு அமைதியாக சென்ற மஹிந்த…!! வேடிக்கை பார்த்த ரணில்..!!

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என தெரிவித்து பெரும் பதற்றம் ஏற்பட்டது.சபாநாயகரின் ஆசனத்தை முற்றுகையிட்ட மஹிந்த அணியினர் பெரும் குழப்பத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து சபாநாயகரின் ஆசனத்தை சுற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டதுடன், மஹிந்த அணியினரை நெருங்க விடாமல் பாதுகாத்தனர்.இந்த நிலையில், சபாநாயகரின் மேசையில் இருந்த அனைத்து பொருட்களையும் மஹிந்த ஆதரவாளர்கள் தட்டிவிட்டதுடன், சண்டையிட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.இந்த நிலை மோசமடைந்த நிலையில் சபாநாயகர் தமது ஆசனத்தை விட்டு எழுந்து சென்றிருந்தார்.

மேலும், மஹிந்தவும் தமது ஆசனத்தை விட்டு எழுந்து மெதுவாக வெளியேறினார். இத்தனை குழப்பங்களையும் ஒரு ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரணில், சற்று நேரம் அமர்ந்து இருந்து விட்டு அவரும் எழுந்து சென்றார்.இந்த நிலையில் “தப்பி ஓடிவிட்டார்” என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கூச்சலிட்டு தற்போது நாடாளுமன்றில் அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாராளுமன்றில் அமளி சபாநாயகரை சுற்றிவளைத்து கருத்து முரண்பாடு சபையின் சபாநாயகர் ஒத்திவைக்காமல் சபையிலிருந்து வெளியேறினார்!

இன்றைய அமர்வில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாார நிலைமைகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது உரையாற்றி வருகின்றார். சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! – மைத்திரி சமூகமளிப்பாரா? அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில், நாடாளுமன்றம் இன்று காலை மீண்டும் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.இன்றை ய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். சம்பிரதாயப்படி நேற்று ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வருகைதருவாரென எதிர்பார்க்கப்பட்ட போதும், அவரது வருகை இடம்பெறவில்லை. எனினும், ஜனாதிபதியின் உரை நேற்று நாடாளுமன்ற அமர்வில் வாசிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வருகைதருவாரென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றில் அறிவித்தார். அதனால், இன்று ஐக்கிய தேசிய முன்னணியினர் ஆளும் தரப்பு ஆசனங்களில் அமரப்போவதாக அறிவித்துள்ளனர். எனினும், மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் பதவியில் தொடர்வார் என்றும், தற்போதைய அரசாங்கமே தொடரும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அமைதியாக ஆரம்பித்து போர்க்களமானது பாராளுமன்றம்

அமைதியாக ஆரம்பித்து போர்க்களமானது பாராளுமன்றம்

Posted by virakesari.lk on Rabu, 14 November 2018

dan news

இலங்கை அரசியல் நிலவரம்…

Posted by DAN News on Rabu, 14 November 2018

SHARE