பாராளுமன்றில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு செல்வம் எம்.பி அஞ்சலி

269

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொது மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று சபையில் அஞசலி செலுத்தினார்.

நேற்று நாடாளுமன்ற ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற மோதலின்போது புதைக்கப்பட்ட கன்னிவெடிகளால் பாதிக்கப்பட்டு தங்கள் உடல் அவையங்களை இழந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

நிலக்கன்னிவெடிகள் வெடித்ததால் வடக்கில் பலர் தங்கள் உடல் அவையங்களை இழந்து பல கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும் தங்களது அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் பாராமுகமாக நடந்துகொள்ளாமல் அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.selvam mp

SHARE