பாராளுமன்றில் ராஜபக்ஸ கலாச்சாரம் நீடிக்கின்றது – கரு பரணவிதாரன

248
பாராளுமன்றில் ராஜபக்ஸ கலாச்சாரம் நீடிக்கின்றது – கரு பரணவிதாரன - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:

பாராளுமன்றில் ராஜபக்ஸ கலாச்சாரம் தொடர்ந்தும் நீடித்து வருவதாக பாராளுமன்ற மற்றும் ஊடகப் பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்குள்ளும் ஊடகங்களிலும் கலாச்சாரத்தை மாற்றிய போதிலும், பாராளுமன்றில் தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஸ கலாச்சாரம் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னமும் மஹிந்த ராஜபக்ஸ கலச்சாரத்தை தோற்கடிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ஸ கலாச்சாரத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை எனவும் மாற்றுக் கருத்துக்களை தாங்கிக் கொள்ள தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது கடந்த காலம் பற்றிய உண்மைகள் அம்பலமாகும் என்ற அச்சத்தில் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றில் பல்வேறு குழப்பங்களை விளைவித்து வருகி;ன்றன என அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி இருக்கின்றது என்பதனை காண்பிப்பதற்கு வேறும் எதனையும் செய்ய முடியாத காரணத்தினால், பாராளுமன்றில் கலகங்களை விளைவித்து வருகின்றனர் என பிரதி அமைச்சர் கருணாரட்ன பரவிதாரண  தெரிவித்துள்ளார்.

SHARE