பாரா ஒலிம்பிக் போட்டிகள்இந்தியா பெற்ற பதக்கங்கள் எத்தனை?

301

625-500-560-350-160-300-053-800-748-160-70-5

பாரா ஒலிம்பிக் போட்டியில் இது வரை இந்தியா 12 பதக்கங்களை பெற்று அசத்தியுள்ளது.

பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டி வருகிற 18 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 4,300க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்குபெற்றனர்.

தற்போது வரை நடைபெற்று முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய சார்பில் தங்கவேலு மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கமும், தேவிந்திரா ஈட்டி எரிதலில் தங்கமும், மாலிக் தீபா குண்டு எரிதலில் வெள்ளியும், வருன்சிங்பாடி உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் என மொத்தம் தற்போது வரை 4 பதக்கங்களுடன், பாராஒலிம்பிக் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 31 வது இடம் பிடித்துள்ளது.

முதல் மூன்று இடங்களில் 147 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தையும், இதற்கு அடுத்த படியாக கிரேட் பிரிட்டன் 75 பதக்கங்களுடனும், 72 பதக்கங்களுடன் உக்ரைன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

1968 ஆம் ஆண்டுகளில் இருந்து பாரா ஒலிம்பிக்கில் பங்கு பெற்று வரும் இந்தியா, இதுவரை 4 தங்க பதக்கம், 4 வெள்ளி பதக்கம், 4 வெண்கல பதக்கம் என மொத்தம் 12 பதக்கங்களை பெற்றுள்ளது.

SHARE