பாரிசில் கோடைக்காலத்தால் திண்டாடும் பிரான்ஸ் மக்கள்: குளு குளு நற்செய்தி (வீடியோ இணைப்பு)

383

 

பாரிசில் கோடைக்காலம் நிலவி வருவதால் மக்கள் இளைப்பாறுவதற்காக மிகப்பெரிய 5 பூங்காக்கள் மற்றும் 127 சிறிய பூங்காக்களை திறந்து வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.szechenyi_baths

பிரான்ஸ் தலைநகரான பாரிசில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இதனால், மக்கள் இளைப்பாறுவதற்காக பாரிசில் உள்ள Buttes-Chaumont, Martin-Luther-King, Montsouris, André Citroën, மற்றும் Monceau ஆகிய மிகப்பெரிய பூங்காக்களை இரவு முழுவதும் திறந்து வைக்குமாறு பசுமை கட்சி(Green Party) வலியுறுத்தியதைத் தொடர்ந்து தற்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர் David Belliard கூறுகையில், இது மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும்.

ஏனெனில், இரவு நேரங்களில் இளைப்பாற வேண்டும் என்று நினைக்கும் மக்கள் இது போன்ற பூங்காக்களை பயன்படுத்திக்கொள்ளலாம், இது தவிர மேலும் 127 சிறிய பூங்காக்களும் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் 35 ° செல்சியஸ்க்கு வெப்பநிலை அதிகரித்தால் தொழிலாளர்களை தங்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கலாம் என இடதுசாரி கட்சியை சேர்ந்த Jean-Jacques நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இதுதொடர்பான முடிவுகள் இன்னும் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படவில்லை. இவரின் இந்த கருத்துக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது.

மேலும் பாரிஸ் நகர மக்கள் பாலத்துக்கு கீழே உள்ள கால்வாய்களுக்கு சென்று நீச்சல் உடைகள் அணிந்து இளைப்பாறி வருகின்றனர்.

பொது இடங்களில் உள்ள கால்வாய்களில் மக்கள் இவ்வாறு நீச்சல் உடைகள் அணிந்து இளைப்பாறுவது அரசாங்கத்தால் தடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ளதால் அரசாங்கமும் மக்களின் இந்த செயலை கண்டுகொள்ளவில்லை.

Share/Bookmark

SHARE