பாரிய பண மோசடிக்குள் மறைந்து போகும் நாமலின் இளைஞர் படையணி

273
கடந்த ஆட்சியின் போது தான் தலைமை தாங்கிய இளைஞர்களுக்கு நாளை அமைப்பு தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாகாமல் இருப்பதற்கு காரணம் மக்கள் எதிர்ப்பினாலேயே என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்க வளங்களை பயன்படுத்தி செயற்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையால் இளைஞர்களுக்கு நாளை அமைப்பு தற்போது செயற்படுத்தபடாமல் உள்ளத. இது தொடர்பில் நாமலிடம் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொர்பில் மேலும் கருத்து வெளியிட்டவர், முன்பு போல் ஊடகங்களில் எங்களின் இளைஞர்களின் நாளை அமைப்பு தொடர்பில் காண முடியவில்லை. ஏன் என்றால் அதனை விட அதிகமாக மக்கள் பிரச்சினைகளையே வெளியிடுகின்றனர். எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டமே.

இளைஞர்களுக்கு நாளை அமைப்பு மேலும் கல்வி தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றது.

பணம் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சியை கட்டுபடுத்துவதற்கு அரசாங்கம் பகுதி பகுதியாக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.

சட்ட விரோதமான முறையில் தேடிய 15 கோடிக்கும் அதிகமான பணத்தை பயன்படுத்தி ஹெலிகொப் நிறுவனத்தை கைப்பற்ற முயற்சித்ததாக நான் உட்பட 08 பேரின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் நான் நீதிமன்றத்தின் முன் குற்றவாளியாகவில்லை. தேர்தல் காலக்கட்டங்களில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அவ்வாறே முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE