பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள உலகம்

150

1945 ஆம் ஆண்டின் பின்னர் உலகம் பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

யேமன், தென்சூடான், சோமாலியா மற்றும் நைஜீரிய முதலான நான்கு நாடுகளில் 22 கோடிக்கும் அதிகமான மக்கள் பசி, பட்டினியால் பாதிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான குழுத் தலைவர் ஸ்டீபன் ஓ ப்ரெய்ன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நேற்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யேமனில் 14.1 மில்லியன் பேரும், தென் சூடானில் 4.9 மில்லியன் பேரும், சேமாலியாவில் 2.9 மில்லியன் பேரும், நைஜீரியாவில் 1.8 மில்லியன் பேரும் பசி, பட்டினியை எதிர்நொக்கி உள்ளனர்.

இந்த நாடுகளில் தொடரும் பசி, பட்டினி பாதிப்பை தவிர்ப்பதற்கு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான குழுத் தலைவர் ஸ்டீபன் ஓ ப்ரெய்ன் தெரிவித்துள்ளார்.

SHARE