பாரிஸில் அகதிகள் தடுப்பு மையத்திலிருந்து தப்பியோடிய 10 பேர்! பரபரப்பு சம்பவம்

129

 

பாரிஸில் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள அகதிகள் தடுப்பு மையத்திலிருந்து 11 அகதிகள் தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த தடுப்பு மையத்தில் தங்கியிருந்த அகதிகள் ஜன்னல் ஒன்றை உடைத்து அதன்வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.

மொத்தமாக 11 அகதிகள் தப்பிச் சென்றதாக காலை 9 மணிக்கு உறுதிப்படுத்தப்பட்டது.அவர்களில் S கண்காணிப்பு பட்டியலில் உள்ள ஆபத்தான அகதிகள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே தடுப்பு முகாமில் கடந்தவாரம் மோதல் ஒன்று இடம்பெற்றதாகவும், அகதிகள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE