
பாரிஸில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பாரிஸில் உள்ள வங்கியை தகர்க்க குறித்த வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டதாக தெரிவக்கப்படுகின்றது.சம்பவ இடத்திலிருந்து வங்கிகளின் நிழற்பட அச்சுக்கள் கைபற்றப்பட்டுள்ளன.
மேலும், குண்டு வெடிப்பில் பயன்படுத்தும் எரிவாயு உருளைகள், மின்கம்பிகள் உள்ளிட்டவையும் அந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டன.
அந்த குடியிருப்பில் உள்ள வேலையாள் கொடுத்த தகவலின்பேரில் இரண்டுபேர் கைதுசெய்யப்பட்டனர். தீவிரவாத தடுப்பு பொலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.