பார்கின்சன் நோய்… விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

159

625-500-560-350-160-300-053-800-748-160-70-4

பார்கின்சன் (Parkinson) எனப்படுவது மனிதனின் பிரதான நரம்புத் தொகுதியில் ஏற்படக்கூடிய நோய் ஆகும்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கங்களில் பாதிப்பு ஏற்படும்.

பார்கின்சன் நோயானது மூளையில் இருந்தே ஆரம்பிப்பதாக இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்தது.

ஆனால் இந் நோய் குடல் பகுதியில் இருந்து ஆரம்பிப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.இந் நோய்த்தாக்கத்தின் பாதிப்பாக அசைவில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி நடுக்கம், விறைப்பு போன்றனவும் ஏற்படுகின்றன.

இதுவரை காலமும் இந்நோய்க்கான உரிய தீர்வு ஒன்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.இதற்கு காரணம் நோய்த்தாக்கம் ஆரம்பிக்கும் இடம் சரியாக கண்டறியப்படாமல் இருந்தமையாக இருக்கலாம்.

ஆனால் Californian Institute of Technology ஆய்வாளர்கள் தற்போது இதனை கண்டுபிடித்துள்ளமையினால் எதிர்காலத்தில் வினைத்திறன் வாய்ந்த சிகிச்சை முறை ஒன்று கண்டுபிடிக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

SHARE