(பா.திருஞானம்)
இலங்கை யோசிடா அறக்கட்டளையின் தலைவர் வணக்கத்துக்குரிய பனகல உபதிஸ்ஸ நாயக்கதேரரின் தலைமையில் பார்க் ஜூன் ஹோ சர்வதேச ஆரம்ப பாடசாலை யாழ்ப்பானம் வட்டுக்கோட்டையில் (18.09.2018) திறந்து வைக்கபட்டது.
இந் நிகழ்வில் தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன், விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பார்க் ஜூன் ஹோ சர்வதேச ஆரம்ப பாடசாலையின் முதல் மாணவன் அனுமதி கல்வி இராஜாங்க அமைச்சரினால் மேற்க்கொள்ளப்பட்டதுடன், தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், அதிதிகளின் உரைகள், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் போன்றன நடைபெற்றன.














