பார்சிலோனாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி: சரமாரியாக சுட்டுத் தள்ளிய பொலிசார்

200

ஸ்பெயினின் பார்சிலோனாவில் 13 பேரின் உயிரை வாங்கிய தீவிரவாதி சரமாரியாக சுட்டு கொல்லப்பட்டான்.

பார்சிலோனாவில் லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பொதுமக்கள் சாலையை கடந்து கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த வேன் ஒன்று பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் 13 பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்றுக் கொண்டது.

இருப்பினும் தாக்குதலை நடத்திய காரை வாடகைக்கு வாங்கியவன் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ட்ரிஸ் ஒபகிர் (20) என்று கூறிய பொலிசார் அவனது புகைப்படத்தை நேற்று வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து பொலிசார் நடத்திய தீவிர சோதனையில் காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தங்கியிருந்த பகுதியை பொலிசார் முற்றுகையிட்டனர். அதன் பின் அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இருந்த போதிலும் தாக்குதல் நடத்தியவனை பொலிசார் தேடி வந்த நிலையில், அவன் மேற்கு பார்சிலோனாவில் இருந்ததாகவும், அவனை பொலிசார் என்கவுண்டரில் கொன்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE