கயல் சந்திரன் அஞ்சனாவை திருமணம் செய்து பிறகு தனது திரைப்பயணத்தில் ஒவ்வொரு அடியும் நிதானமாக எடுத்து வைக்கிறார். அந்த வகையில் நாளைய இயக்குனரில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்ற சுதர் என்ற புதுமுக இயக்குனர் சொன்ன கதையை கேட்டு உடனே ஒப்புக்கொண்டுள்ளாராம்.
இப்படம் 4 திருடர்களை பற்றிய டார்க் ஹுமர் படமாக உருவாகவுள்ளது, கிட்டத்தட்ட சூதுகவ்வும் ஸ்டைலில் ஒரு புதுவிஷயத்தை கையாளவுள்ளார் இயக்குனர் சுதர். இப்படத்தில் பார்த்திபனும், சந்திரனும் பக்கா திருடர்களாக நடிக்கவுள்ளனர், அதுமட்டுமில்லாமல் சந்திரனின் சித்தப்பாவாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பார்த்திபன் .
மேலும் பிச்சைக்காரன் படத்தில் நடித்த satna titus சந்திரனுக்கு ஜோடியாகவும் , நடிகர் சாம்ஸ் மற்றும் டேன்னி நண்பரகளாக நடிக்கவுள்ளனர். இப்படத்தை 2mb என்ற புது நிறுவனம் சார்பில் ரகுநாதன் சுப்ரமணியும் தயாரிக்கவுள்ளார்.