
ஐபோன் 12 ப்ரோ
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் அப்டேட் பார்வை குறைபாடு கொண்டவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற உதவுகிறது. இந்த அம்சம் பார்வையற்றவர்கள் அருகில் மனிதர்கள் எத்தனை தூரத்தில் உள்ளனர் என்பதை கணக்கிட்டு தெரிவிக்கிறது.
மக்கள் அருகில் இருப்பதை கண்டறிவதுடன் மக்கள் எத்தனை தூரத்தில் உள்ளனர் என்ற தகவலையும் இந்த அம்சம் தெரிவிக்கிறது. இந்த அம்சம் ஒஎஸ்14.2 அப்டேட் கொண்ட ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் பயன்படுத்த முடியும்.

பின் அறிந்து கொண்ட விவரங்களை துல்லியமாக கணக்கிட்டு பயனர்களுக்கு தெரிவிக்கிறது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்திய ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபேட் ப்ரோ போன்ற சாதனங்களில் அதிநவீன லிடார் ஸ்கேனரை வழங்கி இருக்கிறது