பார்வை இழந்தவர்களும் இனி பேஸ்புக்கினை பயன்படுத்தலாம் (வீடியோ இணைப்பு)

284
16-1424075244-facebook1

உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்டு வேகமாக வளர்ந்துவரும் சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்கின்றது.

அதாவது பார்வையிழந்தவர்களும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களை பார்வையிடும் பொருட்டு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை (Artificial Inteligent – AI) அறிமுகம் செய்கின்றது.

இத் தொழில்நுட்பமான ஒரு புகைப்படத்தினைப் பற்றி தெளிவான விளக்கத்தினை தருவதுடன் அப் புகைப்படத்தினை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை, கமென்ட் செய்தவர்களின் எண்ணிக்கை என்பவற்றினையும் எடுத்துக் கூறுகின்றது.

தற்போது ஆங்கில மொழியில் மட்டும் கிடைக்கப்பெறும் இத் தொழில்நுட்பம் விரைவில் ஏனைய மொழிகளிலும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE