ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் பார்வை இழந்த மாணவனான சாரத பவித் ராஜபக்ஷ 181 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
கண்டி கல்வி வலயத்திலுள்ள டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவரை தமது காரியாலயத்திற்கு அழைத்த மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்கா, மாணவனைப் பாராட்டி பணப்பரிசிலும் வழங்கி வைத்துள்ளார்.