பார்வை இழப்பை ஏற்படுத்தும் நோய்கள்!

177

நமது உடலில் கண்கள் இன்றியமையாத உறுப்பு, கண்களில் பாதிப்பு ஏற்பட்டாலே துடிதுடித்துப் போவோம்.

அதுவே கண்பார்வை இழப்பு என்றால் வாழ்க்கையே இருட்டாகிவிடும், கண்களில் தோன்றும் ஒருசில நோய்களை கவனிக்காமல் விட்டால் அது பார்வை இழப்புக்கு வழிவகுக்கிறது.

அப்படிப்பட்ட நோய்கள் என்ன? அது எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

க்ளாக்கோமா(Glaucoma)

நமது கண்களில் உள்ள ஆப்டிக் என்ற நரம்புகள் பார்வைப் பற்றிய தகவல்களை நமது மூளைக்கு அனுப்புகிறது.

இந்த ஆப்டிக் நரம்புகள் சேதமடைந்து, ரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் போது, க்ளாக்கோமா என்ற பாதிப்புகள் ஏற்பட்டு, நமது கண்பார்வையின் இழப்பிற்கு காரணமாகிறது.

கஞ்சக்டிவிடிஸ்(Conjunctivitis)

கஞ்சக்டிவிடிஸ் என்ற நோயானது நமது கண்களில் வெள்ளைப் பகுதில் உள்ள திசுக்களின் பாதிப்பினால் ஏற்படுகிறது.

இந்த பாதிப்பை தான் பிங்க் ஐ என்று சொல்வார்கள். இதுவும் நமது கண்பார்வை இழப்பிற்கு ஒரு காரணமாக உள்ளது.

மேகுலார் சிதைவு (Macular Degeneration)

நமது கண்களில் இருக்கும் ரெட்டினாவின், மேகுலார் என்ற பின்பகுதி நுண்ணிய பொருளையும் துல்லியமாக பார்க்க உதவுகிறது. இந்த பகுதி சிதைவுறும்போது கண் பார்வை இழக்க நேரிடும் வாய்ப்புகள் அதிகமாகிறது.

ரெடினல் பிரிவு (Retinal Detachment)

ரெட்டினல் பிரிவு என்பது நமது கண்ணின் ரெட்டினா, பதிந்திருக்கும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு விலகும் போது சரியான சிக்னல் கிடைக்காமல் கண்பார்வை குறைவுகள் ஏற்படுகிறது.

கேடராக்ட்(Cataracts)

கேடராக்ட் என்ற நோய் பெரும்பாலும் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படக் கூடியது. இந்த நோய் நமது கண்களில் உள்ள லென்ஸில் புகைப் போல் பெருகி, திசுக்களால் மறைக்கப்பட்டு, கண்பார்வையின் இழப்பு ஏற்படுகிறது.

SHARE