குற்றப்பரம்பரை என்ற கதையை படமாக்குவதில் பாரதிராஜா, பாலாஇருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த கதைக்கு எழுத்தாளர்கள் ரத்னகுமார், வேல ராமமூர்த்திஇருவரும் உரிமை கொண்டாடுகின்றனர். இப்படத்தை வேல ராமமூர்த்தி பாலா இயக்கவேண்டும் என்று கூற, ரத்னகுமாரோ, இது எனது கதை, பாரதிராஜாதான் இயக்க வேண்டும் என்கிறார்.
இதுகுறித்து ரத்னகுமார் கூறுகையில், 1997ல் இக்கதையை எழுதி அதனை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தேன். பாரதிராஜா இயக்க,சிவாஜி கணேசன் தந்தையாகவும், சரத்குமார் மகனாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் சிவாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பட வேலைகள் நிறுத்தப்பட்டன.
தற்போது அப்படத்தை பாலா இயக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. குற்றப்பரம்பரை கதை என்னுடையது, நான் எழுதிய கதையை திருடி உள்ளனர். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. குற்றப்பரம்பரை படத்தை பாலா இயக்க கூடாது, மீறி இயக்கினால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என ரத்னகுமார் கூறியுள்ளார்.