பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய குறித்த 17 சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக ஹக்மன, மஹியங்கனை, வெல்லவாய, நவகமுவ, கொட்டாவ மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வைத்து ஒரே நேரத்தில் 17 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு முறைப்பாட்டினை வழங்கியிருந்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.