பாலியல் பொம்மையை மனித சடலம் என எண்ணி பொலிஸாரை வரவழைத்த சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.

527

தோட்டமொன்றில் வீசப்பட்டுக் கிடந்த பாலியல் பொம்மையொன்றைக் கண்ட சிலர், அது கொல்லப்பட்ட பெண் ஒருவரின் சடலம்  என எண்ணி பொலிஸாரை வரவழைத்த சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.

துணியினால் கட்டப்பட்டு, டேப் ஒட்டப்பட்ட நிலையில் இந்த பொம்மை காணப்பட்டதாம். தூரத்திலிருந்து பார்த்த சிலர் அது கொடூரமாக கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் என எண்ணி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனராம்.

அதையடுத்து சுமார் 50 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அத்தோட்டத்துக்கு விரைந்துசென்றனர். அருகில் சென்று பார்த்தபோது அங்கே மனித உருவிலான பொம்மையொன்று கிடப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகிலுள்ள கியோன்ஜி மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

“இந்த பொம்மையின் தோற்பகுதி மனிதத் தோல் போன்று காணப்படும் ஒரு கலவையினால் செய்யப்பட்டுள்ளது.

அதை தொட்டுப்பார்த்தாலும் சிலர் அது மனித உடல் எனக் கருதிவிடுவர்” என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE