
தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா, 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில், முதன் முறையாக 6 கோடி ரூபாய் சம்பளத்தை எட்டியுள்ளார். ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்திற்காக நடிகை நயன்தாராவுக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய நடிகை ஒருவருக்கு இவ்வளவு சம்பளமா என திரைத்துறையினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். சமீபத்தில் வெளியான சாஹோ படத்திற்காக ஷ்ரத்தா கபூர் 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
