அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கலை பகுதியில் பால் ஏற்றிச்சென்ற பவுசர் லொறியென்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கித்துல்கலை கலுபோத்தென்ன பகுதியிலே 13.09.2016 மதியம் 1 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது.
அட்டனிலிருந்து கேகாலை நோக்கி 4500 லீட்டர் பால் ஏற்றிச்சென்ற பவுசரே திடீரென தடை இயங்காத நிலையில் மண்மேட்டில் மோதுண்டு பாதையிலேயே குடைசாய்ந்துள்ளது.
லொறியில் சிக்குண்ட நிலையில் சாரதியை பிரதேசமக்கள் பாதிப்பின்றி மீட்டதுடன் பால் கித்துல்கலை ஆற்றில் கலந்துள்ளது. மேலும் விபத்துக்குள்ளான லொறியை அகற்றும் நடவடிக்கையில் கித்துல்கலை பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், ஒரு வழி போக்குவரத்து இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இரமசந்திரன்