பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த நான்கு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொது சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வர்த்தக நிலையங்களில் இருந்து காலாவதியான இனிப்பு வகைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.