பிகினி ஆடை வடிவமைப்பாளர் ஆனது ஏன்? பெண்ணின் சோகக் கதை

229

625-500-560-350-160-300-053-800-748-160-70

தான் அணிந்த உடையால் சவுக்கடி வாங்கிய இஸ்லாமிய பெண் ஒருவர் பேஷன் துறையில் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் வசித்து வரும் பெண் Tala Raassi (35). இவர் இப்போது புகழ் பெற்ற பேஷன் டிசைனராக இருக்கிறார்.

இவர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் தான் இளம்வயதில் சந்தித்த பிரச்சனைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, நாங்கள் குடும்பத்துடன் ஈரானில் வசித்து வந்தோம், எனக்கு 16 வயதிருக்கும் போது ஒரு பொது பார்ட்டிக்கு குட்டை பாவாடை அணிந்து சென்றிருந்தேன்.

அப்போது இஸ்லாமிய பாதுகாவலர்கள் படையை சேர்ந்தவர்கள் என்று கூறி கொண்டு சில இளைஞர்கள் அங்கு வந்து என்னையும், என் போல உடையணிந்திருந்த வேறு சில பெண்களையும் ஒரு தனி அறைக்கு கூட்டி சென்றனர்.

அங்கு அவர்கள் இஸ்லாமிய பெண்ணாக இருந்து கொண்டு, ஏன் இப்படி உடையணிந்தாய் என கூறி பிரம்பால் நாற்பது முறைக்கு மேலே அடித்தனர்.

நான் வலியால் துடித்தேன், பின்னர் அழுத படி வீட்டிற்கு வந்தேன், பின்னர் என் குடும்பத்தார் நாம் இங்கு இருக்க வேண்டாம் என கூறி அமெரிக்காவுக்கே எனனை கூட்டி சென்றார்கள்.

அங்கு சென்றவுடன் நான் பேஷன் டிசைனிங் படிப்பில் சேர்ந்தேன். அன்று எந்த ஆடையால் என்னை பலர் துன்புறுத்தினார்களோ அதே துறையில் நான் மிக பெரிய பிரபல பிகினி ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறேன் என அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

SHARE