தன்னுடைய 70 வயதிலும் பாடி பில்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்று சாதனை படைத்திருக்கும் ஒரு பாட்டி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கிறார்.
அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தை சேர்ந்தவர் மேரி கிளைடான் (70).
இவர் தன் இளம் வயதிலிருந்தே பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதில் பங்கேற்று பல வெற்றிகளையும், பரிசுகளையும் குவித்துள்ளார்.
இது பற்றி இவர் கூறுகையில், என் இளம் வயதிலிருந்தே நான் இதில் பங்கேற்று வருகிறேன். தினமும் காலையி 4.30 மணிக்கு ஜிம் க்கு சென்று உடற்பயிற்சி செய்வதை நான் வழக்கமாக கொண்டுள்ளேன்.
சரியான உணவு கட்டுபாடுகள் மூலமே இந்த வயதிலும் என் உடல் கட்டுடல் மேனியாக இருப்பதாக கூறும் மேரி எல்லா வயதான பெண்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என இவர் வலியுறுத்துகிறார்.
வரும் ஞாயிற்று கிழமை அவுஸ்திரேலியாவில் நடைபெறும் நேஷனல் லெவல் பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்க போகும் மேரி கிளைடான் அதற்காக கடந்த நான்கு மாதங்களாக கடுமையாக உழைத்து வருகிறார்.
சாதிப்பதற்கு வயது தடையில்லை என வாழும் இவர் தன்னம்பிக்கைக்கு எடுத்துகாட்டு என்பதில் சந்தேகமில்லை.