பிக்கு கொலை விவகாரத்தில் புதிய திருப்பம்

99

 

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் பௌத்த பிக்கு மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

எரியூட்டப்பட்ட நிலையில் கார்
இந்த சொகுசு கார் நேற்று(23.01.2024) கடுவெல-கொடல்ல என்ற இடத்தில் புதர்கள் நிறைந்த பகுதியில் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்கள் வந்த வாகனத்தின் அதே உரிமத் தகடுடன் மற்றுமொரு வாகனம் பாணந்துறை எலுவில பகுதியிலுள்ள கேரேஜ் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை சம்பவம்
சொகுசு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்திலுள்ள விகாரையின் கலபாலுவாவே தம்மரத்ன தேரர் (45) உயிழந்தார்.

சொகுசு காரில் வந்த அடையாளம் நால்வர், தாம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் எனவும் தமக்குக் கிடைத்த தகவலின் பேரில் சோதனையிட வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் சோதனையிடுவது போன்று நடித்து இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

SHARE