பிக்பாக்கெட் திருடனை அடித்து உதைத்த ரயில்வே பொலிசார் மயங்கி விழுந்த அவனை இழுத்துச்சென்ற சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

573

மத்திய பிரதேசத்தில் பிக்பாக்கெட் திருடனை அடித்து உதைத்த ரயில்வே பொலிசார் மயங்கி விழுந்த அவனை இழுத்துச்சென்ற சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியார் ரயில் நிலையத்தில் பிக்பாகெட் திருடனை ரயில்வே பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கையும் களவுமாக பிடித்து அவரை சரமாரியாக அடித்துள்ளார்.

இதில் பொலிசாரின் கடுமையான தாக்குதலில் திருடன் சம்பவயிடத்திலேயே மயங்கி விழுந்துள்ளான். இருப்பினும் அந்த திருடனை விட்டுவிடாமல் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல, மயங்கி கிடந்த நிலையில் திருடனின் சட்டை காலரை பிடித்து தரதரவென இழுத்துச்சென்றார்.

அந்த ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் அதனை வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றுள்ளனர். ஆனால் இச்சம்பவத்தினை ஒருவர் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாக பரவியது. காவலரின் இந்த வன்முறை செயலுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், குறிப்பிட்ட அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE