பிக்பாஸில் பங்கேற்கும் பிரபல வீரர் ஸ்ரீசாந்த்?

170

இந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 12 விரைவில் தொடங்கவுள்ளது.

இதற்கான அறிமுக விழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த நிலையில், உண்மையான ஜோடிகள் தங்கவுள்ளனர்.

எனவே ஒவ்வொரு நாளும் வித்தியாசமான திருப்பங்கள் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சீசனில் பிரபல கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இதற்கான அறிவிப்பும் ரகசியம் காக்கப்படுகிறதாம்.

ஸ்ரீசாந்த் தவிர, நடிகைகள் தனுஸ்ரீ தத்தா அவரின் சகோதரிகள் இஷிதா தத்தா, தீபிகா காகர், கரண்விர் போரா, டேனி டி, மகிகா சர்மா, எம்.ரோஸ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்று தெரிகிறது.

SHARE