பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் அடுத்த சீசனுடன் களம் இறங்கிவிட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சி முன் போல் இல்லை என்பதே ரசிகர்களிடத்தில் நிலவும் உண்மை.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா குறித்தே பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் பாலாஜி பேசினாலும் நித்யா கண்டுகொள்வதில்லை.
உள்ளிருக்கும் சிலர் அவர்களை சேர்த்து வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நித்யா தற்போதிருக்கும் சமையல் அணியில் மற்றவர்களுடன் ஒத்துழைப்பு இல்லை.
இதனால் தான் குடும்பத்தில் இப்படி பிரச்சனை மற்றவர்கள் பேசிக்கொள்கிறார்கள். பாலாஜியிடம் குடும்ப பிரச்சனை பற்றி பேச நினைக்கையில் அவர் சுற்றி கேமரா இருப்பதால் குடும்ப விசயங்களை தவிர்த்து வருகிறார்.
ஆனால் சில நேரத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க சமூக வலைதளங்களில் ஒருவரின் குடும்ப பிரச்சனையை வைத்து TRP ரேட்டிங்ஸ்க்காக இப்படி விளம்பரம் தேடுவதா என கூறிவருகிறார்கள்.