பிக்பாஸ் பிரபலத்திடம் நடனம் பயிலும் கங்கனா ரனாவத்

152
தீவிர பரதநாட்டிய பயிற்சியில் கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் தலைவி படத்தை விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக பரதநாட்டியம் கற்று வரும் கங்கனா ரனாவத் சில புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
காயத்ரி ரகுராம் - கங்கனா ரனாவத்அதில் அவர் பிரபல நடன இயக்குனர் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராமிடம் இருந்து பரதம் கற்று வருதாக தெரிகிறது. கங்கனா ஒரு கதாபாத்திரத்தை நேர்த்தியாய் செய்ய கூடியவர். மணிகர்னிகா படத்திற்காக வாள் பயிற்சி சண்டை பயிற்சி எல்லாம் கற்று தேர்ந்தே படத்தில் நடித்திருந்தார். அதே போல் தலைவி படத்திற்காகவும் மிக தீவிரமாய் பயிற்சி செய்து வருகிறார்.
SHARE