இருட்டு அறையில் முரட்டுக்குத்து இந்த ஒரே படத்தில் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர் யாசிகா ஆனந்த். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நோட்டா படத்தில் ஒரு முக்கியமான ரோலில் இவர் நடித்துள்ளாராம்.
யாசிகா தற்போது பிக்பாஸ்-2 வீட்டிற்குள் சென்றுள்ளார், அதன் மூலம் இவர் இன்னும் பிரபலமடைந்துவிட்டார்.
இந்நிலையில் யாசிகா ஆனந்தின் அடுத்தப்படம் மணியார் குடும்பம் தானாம், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்கவுள்ளது.
இதில் இவர் எப்படியும் கலந்துக்கொள்ள மாட்டார் என்பது உறுதி, மேலும், மணியார் குடும்பம் தம்பி ராமையா மற்றும் அவரின் மகன் நடித்துள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.