பிக்பொஸ் வீட்டில் ஒவ்வொருவரிடமும் வரிசையாக சண்டை போட்டு வரும் அர்ச்சனா

139

பிக்பொஸ் வீட்டில் அண்மைக்காலமாக அர்ச்சனா நாட்டாமைத்தனம் செய்து வருகிறார் என போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக நடிகர் கமல்ஹாசனும் ”உங்களுடைய தொகுப்பாளர் வேலையை பிக்பொஸ் வீட்டில் செய்ய வேண்டாமென அர்ச்சனாவுக்கு அறிவுரை கூறினார் ” என்பது அனைவரும் அறிந்ததே.

இந் நிலையில் தனது ஆதரவாளர்கள் ரியோ, நிஷா தவிர ஒவ்வொருவரிடமும் வரிசையாக சண்டை போட்டு வரும் அர்ச்சனா, இன்று ஆரியிடம் மோதுவது போன்ற புரோமோவொன்று வெளியானது.

நான் சாப்பாடு வைக்கும் போது என்னிடம் நீங்கள் போய் உட்காருங்கள், நான் சாப்பாடு வைக்கிறேன் என்று நீங்கள் எப்படி சொல்லலாம்? என்று ஆரி வாதாட, அதற்கு அர்ச்சனா திணறியபடியும் திசைதிருப்பியும் பதிலளித்து வருகிறார்.

அர்ச்சனா-பாலாஜி மோதல் போல் இந்த மோதலும் மிகப்பெரிய அளவில் பிக்பொஸ் வீட்டில் வெடிக்கும் என தெரிகிறது.

அர்ச்சனாவின் ஆதிக்கம் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வருவது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கும் என்றே கருதப்படுகிறது.

SHARE