பிக்பொஸ் வீட்டில் பாலா-ஷிவானியை அடுத்து மேலும் ஒரு காதல் ஜோடி?

184

பிக்பொஸ் வீட்டில்   பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே.

இந் நிலையில்  இன்னொரு காதல் ஜோடி சேர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. நேற்றைய தினம் கொடுக்கப்பட்டுள்ள ’பாட்டி சொல்லை தட்டாதே’ போட்டியில் சோம் மற்றும் ரம்யா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடித்தனர்.

இவர்கள் இருவரும் பாட்டியின் இளைய மகன் மற்றும் இளைய மருமகளாக நடிக்கின்றனர். மேலும் இருவருக்கும் திருடர்கள் கதாபாதிரம் கொடுக்கப்படுகிறது என்பதும், சோம்-ரம்யாவின் கூட்டாளி அதாவது மகளாக கேப்ரில்லா நடிக்கிறார் என்பதும் இவர்கள் மூவரும் சேர்ந்து வீட்டில் இருக்கும் பாட்டி பத்திரப்படுத்தி வைத்துள்ள சொத்து பத்திரத்தை திருடுவது தான் போட் டி எனக்  கொடுக்கப்படுகிறது.

இதனையடுத்து ஒருபக்கம் பாலாஜி பத்திரத்தை திருட திட்டம் தீட்டி வரும் நிலையில் , குறித்த திட்டத்தை கேபிரில்லா மூலம் தெரிந்து கொண்ட ரம்யா, ஆரி-சனம் சண்டையின்போது யாருக்கும் தெரியாமல் பாலாஜிக்கு முன்னரே பத்திரத்தை திருடி விடுகின்றார்.

இந் நிலையில் சோம், ரம்யா உண்மையிலேயே ஜோடியாகிவிடுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கு முன்னர்   பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு காதல் உருவானால் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE