பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தான் ஜெயிப்பார் – நடிகர் சதீஷ்

196

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தான் இறுதியில் ஜெயிப்பார் என நகைச்சுவை நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

தினமும் ஏதாவது பரபரப்பை கிளப்பும் போட்டியாளர்களில் பெரும்பாலும் ஜூலியைத் தான் குறிவைக்கின்றனர்.

முக்கியமாக நடிகை ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் தொடர்ந்து ஜூலியிடம் வாக்குவாதம் செய்தும், மோதலை கடைபிடித்தும் வருகிறார்கள்.

ஆர்த்தி மற்றும் காயத்ரியின் இந்த செயல் குறித்து தான் சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு போட்டியாளர் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இதற்கு இன்னும் பல நாட்கள் இருக்கும் நிலையில், ஜூலி தான் பிக் பாஸில் வெற்றி பெறுவார் என திரைப்பட நகைச்சுவை நடிகர் சதிஷ் டுவிட்டரில் கூறியுள்ளார்.

மேலும், ஜூலி ஜெயிக்க போவதற்கு காரணம் ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் தான் எனவும் கூறியுள்ளார்.

SHARE