பிக் பாஸ் மாயாவின் தாய், தந்தை மற்றும் மூன்று சகோதரிகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்..

89

 

பிக் பாஸ் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார் மாயா. இவர் முதல் வாரத்தில் ஆரம்பித்து நான்காவது வாரம் வரை அடாவடியாக போட்டியிட்டு வந்தார்.

ஆனால், கமல் ஹாசன் இடம் இருந்து ஓவராக திட்டு வாங்க ஆரம்பித்துவிட்டோம் என எண்ணிய மாயா, அதன்பின் தனது அடாவடியான ஆட்டத்தை குறைத்துக்கொண்டார். இதன்பின் தற்போது வரை தந்திரமாக இந்த விளையாட்டை கையாண்டு வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு வெளிவந்த கமலின் விக்ரம் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். அதன்பின் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மாயாவிற்கு இன்னும் அதிக அளவில் ரீச் கொடுத்துள்ளது.

விக்ரம் படம் மட்டுமின்றி ரஜினியின் 2.0, விஜய்யின் லியோ, விக்ரமின் துருவ நட்சத்திரம் என பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படத்தில் மாயா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE